திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 11 டிசம்பர் 2019 (18:21 IST)

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்!

நேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது.
 
காவலர் உடையில் சிபிராஜின் சீற்றம் மிக்க தோற்றம், மிகப் பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தொடர்ந்து பெற்ற வண்ணம் இருக்கிறது.  இப்படத்தில்  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படப்புகழ் ஷெரின் காஞ்ச்வாலா சிபிராஜின் ஜோடியாக நடிக்க, படத்தின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
 
வால்டர் படம் பார்ப்பவர்களின் அட்ரிலின் சுரபி வேகமாக வேலை செய்யத்தக்க அளவிலான விறுவிறுப்பான  சண்டைக் காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. கோவில் நகரமென புகழப்படும் கும்பகோணத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில், யு.அன்பழகன் இயக்கத்தில் வளர்ந்த 'வால்டர்'   துவக்க நிலையிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருக்கும் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியீடு உலகெங்கும் உள்ள திரையரங்குளில் வெளியிடப்படும் தேதி  குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.