நல்லா பண்றாங்கப்பா லாக்கடவுன்ல... சிம்புவை அடுத்து வெளியான சிபிராஜின் ஒர்கவுட் வீடியோ!
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நேற்று சிம்பு வீட்டை சுற்றி ஒடி ஒர்க் செய்த வீடியோ செம வைராகி ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கரலாக்கட்டையை சுற்றும் ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.