திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 31 டிசம்பர் 2019 (13:41 IST)

ஹிட் அடிக்குமா சிபிராஜின் போலீஸ் அவதாரம்? – வால்டர் டீசர்!

சிபிராஜ் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து திரைக்கு வர உள்ள வால்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

சிபிராஜ் முதன்முறையாக ஆக்‌ஷன் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் வால்டர். இதற்கு முன்னர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ போன்ற போலீஸ் சார்ந்த படங்களில் சிபிராஜ் நடித்திருந்தாலும், போலீஸ் உடுப்பில் கட்டை மீசையோடு ஒரு ஆக்ரோஷமான போலீஸாக சிபிராஜ் நடிக்கும் முழு முதல் போலீஸ் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

உண்மை சம்பவங்களை தழுவிய கதைகள் இப்போது பரவலாக கவனம் பெற்று வரும் நிலையில் இந்த படமும் குழந்தைகள் கடத்தல் குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது.

சிபிராஜுடன் சமுத்திரக்கனி, நட்டி மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை அன்பு இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படாத நிலையில் இதன் ட்ரெய்லர் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து 1993ல் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘வால்டர் வெற்றிவேல்’. அந்த செண்டிமெண்டில் இந்த மகன் சிபிராஜ் படத்திற்கும் ‘வால்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் சத்யராஜுக்கு ஹிட் அடித்தது போல சிபிராஜுக்கும் வால்டர் வெற்றிப்படமாக அமையுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெய்லரை காண….