செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (16:06 IST)

''சிவாஜி கணேசன் தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!'' - சீமான்

sivaji seeman
தமிழ் சினிமாவில்  நடிகர் திகலம் என்று அழைக்கப்படுவர் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இவர் தன் தனித்துவமான நடிப்பிற்காக  போற்றப்படுகிறார்.

இன்று இவர் 95 வது பிறந்த நாளையொட்டி,  நடிகரும், இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான  சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

நடிகர் திலகம்
நமது ஜயா சிவாஜி கணேசன்
95ஆம் ஆண்டு பிறந்தநாள்!

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்
உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி
அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!


 
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போர்
வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுக்கிய
கலை உலகச் சிற்பி தமிழ்ப் பேரினத்தின் பெருமையித கலை அடையாளம்!
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு
அழைக்கப்பட்ட நவரச நாயகன்!

நமது ஐயா
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அர்களின் பிறந்தநாள் இன்று (01-10-2022)
அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு
நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! என்று பதிவிட்டுள்ளார்.

 
Edited by Sinoj