வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 8 மே 2019 (08:55 IST)

வெளவால் மாதிரி தொங்கிட்டு, யோகாவாமாம்... கலாய் வாங்கும் நடிகரின் மனைவி

தொகுப்பாளினியும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி புது யோகா ஒன்றை டிரைய் செய்து கிண்டலுக்குள்ளாகியுள்ளார். 
 
கலர்ஸ் தமிழ் என்னும் சேனனில் தொகுப்பாளினியாக் இருக்கும் கீர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
ஏதேனும் வித்தியாசமாக செய்ய ஆசைப்பட்டேன். இது மிகவும் நன்றாக உள்ளது. நான் இனி மேலும் வலிமையாக மாறப்போகிறேன் என புகைப்படங்களோடு ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். 
அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் யோகாவை ஏரியல் யோகா என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கமெண்டில் சிலர் கேலி செய்ய அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார். 
 
இதற்கு முன்னர் இதே யோகாவை செய்து விஜய் டிவி தொகுப்பாளினி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை கண்ட பலரும் அவரையும் கிண்டலடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.