திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:19 IST)

சீரியல் நடிகருடன் செம்பருத்தி ஷபானாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவர் தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரில் நடிக்கும் ஆர்யன் என்பருடன் திருமண நிச்சயம் செய்துள்ளார். 
 
இருவரும் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஆர்யன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ''அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்டேன். காரணம், இருவரது புற அழகும் ஒருநாள் காணாமல்போகும்.  ஆனால் உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சபனா, ''என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்கத் தவறுவதில்லை'' என காதலுடன் பதிலளித்துள்ளார்.