திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:04 IST)

இந்திரா காந்தியாக லாரா தத்தா… பெல் பாட்டம் டிரைலர் சர்ப்ரைஸ்!

பெல்பாட்டம் படத்தில் முன்னாள் உலக அழகி நடிகை லாரா தத்தா இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் இம்மாதம் இறுதியில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என சொல்லப்படும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 23 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் முன்னாள் உலக அழகி நடிகை லாரா தத்தா இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து இருப்பதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் 1980 களில் நடப்பது போல கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.