திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:07 IST)

46 ஆண்டுகளுக்கு முன் வைத்த அதே டைட்டில்: மீண்டும் களத்தில் இறங்கும் ஏவிஎம்

46 ஆண்டுகளுக்கு முன் வைத்த அதே டைட்டில்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏடிஎம் என்பது தெரிந்ததே. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரை உலகில் உள்ள சூழ்நிலை காரணமாக ஏவிஎம் நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது 
 
ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் ’அந்த நாள்’ என்று தகவல் வெளியாகி உள்ளது. இதே டைட்டிலில் ஏவிஎம் நிறுவனம் கடந்த 1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றை தயாரித்தது என்பதும் அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆரியன் ஷாம் என்பவர் நாயகனாக நடிக்கும் ’அந்த நாள்’ திரைப்படத்தை விவி என்பவர் இயக்க உள்ளார் ராபர்ட் சற்குணம் என்பவர் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது