செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் அடுத்தடுத்து தொடங்க உள்ள நிலையில் செல்வராகவன் நடித்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து உள்ளது
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படம் சாணிக் காகிதம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
மேலும் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடியதோடு படக்குழுவினர் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் கொள்ளையர்களாக நடித்திருப்பதாகவும், இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது