தெலுங்கு நடிகருடன் நெருக்கம்... ரொமான்ஸ் மூழ்கி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்
கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
இப்போது விடா முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக விட்ட இடத்தை பிடித்து வருகிறார். தற்போது தெலுங்கு ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக Sarkaru Vaari Paata படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடன் ரொமான்ஸில் மூழ்கி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகேஷ் பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் .