1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:14 IST)

பாலா படத்தில் நாயகியாகும் கீர்த்தி சுரேஷ்! கதாநாயகனாக அதர்வா!

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா நீண்ட நாட்களுக்குப் பின்னர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். வாடிவாசல் முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

ஆனால் இப்போது படத்தில் கதாநாயகனாக அதர்வாவும், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சூர்யா தயாரிக்க மட்டும் உள்ளதாக சொல்லப்படுகிறது.