1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:55 IST)

நம்முடைய கஷ்டங்களை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… சசிகுமார் கருத்து!

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் அயோத்தி என்ற படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.

இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த பட ப்ரமோஷன்களில் கலந்துகொண்டு பேசிவரும் அவர் “ரசிகர்கள் நாம் கொடுக்கும் சினிமாவை மட்டும்தான் பார்ப்பார்கள். அதை உருவாக்க நாம் படும் கஷ்டங்களை எல்லாம் அவர்களிடம் சொல்வதில் எந்த பயனும் இல்லை. என்ன செய்தாலும் படம் பிடித்தால்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்முடைய கஷ்டங்களை சினிமாவுக்குள் கொண்டு வரக் கூடாது” எனப் பேசியுள்ளார்.