1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:58 IST)

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்… இறுதிக்கட்டத்தில் ஷூட்டிங்!

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் மோசமாக விமர்சித்தனர்.

இதையடுத்து அவர் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இப்போது அந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. கோவில்பட்டியில் பெரும்பாலானக் காட்சிகள் முடிந்த நிலையில் தற்போது சென்னையில் சில காட்சிகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.