புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (14:20 IST)

சந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு !

நடிகர் சந்தானம் தான் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தின் மூலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். அவர் நடித்த படங்கள் பல சரியான வரவேற்புப் பெறவில்லை என்றாலும் அவர் முடிவை மாற்றிகொள்வதாக இல்லை. அவர் கடைசியாக நடித்த ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் இப்போது டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டகால்டி படத்துக்குப் பின் அவர் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் மகனும் அவரோடு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.