செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:29 IST)

தமிழ் சினிமாவில் வெறுமையாக நகைச்சுவை காட்சிகள் - நடிகர் விவேக் வருத்தம் !

தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அனைவராலும் அன்புடன்  அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவரது சமூக அக்கறை கொண்ட பல அழுத்தமான நகைச்சுவைக் காட்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தற்போதைய சினிமாவில் வரும் காட்சிகள் குறித்து விவேக் கருத்து கூறியுள்ளார்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 111 வது பிறந்த நாலை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் விவேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தற்போது வரும் சினிமாப் படங்களில் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், நகைச்சுவைக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பழைய படங்களில் நகைச்சுவை உள்ளது போன்று இனிவரும் படங்களில் நகைச்சுவை வைக்க வேண்டும்; மேலும் நகைச்சுவை பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.இப்போதைய நகைச்சுவைக் காட்சிகள் வெறுமை இருப்பதாகவும் கூறினார்.