புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:22 IST)

400வது படத்தில் நடிக்க ஒப்பந்தமான எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை!

எம்ஜிஆர் நடித்த ஒளிவிளக்கு, பணம்படைத்தவன் சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன், புதிய பறவை, பாலும்-பழமும், பார்மகளேபார், பாவை விளக்கு மற்றும் ஜெமினி கணேசன் நடித்த இருகோடுகள், சக்கரம் உள்பட பல படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி
 
இவருக்கு தற்போது 87 வயது ஆவதால் வயது முதுமை காரணமாக கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி ஓய்வு பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
சந்தானம் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிவரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சவுகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் சவுகார்ஜானகியின் 400வது படம் என்பதால் படக்குழுவினர் சவுகார் ஜானகிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒரு நடிகை 400 படம் நடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் இந்தப் படத்தின் ஹீரோ சந்தானம் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர் 
 
சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை மசாலா பிக்ஸ் அசோசியேஷன் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது