1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:30 IST)

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தானத்துடன் ஜோடி சேரும் நடிகை!

நடிகர் சந்தானம் முன்னணி காமெடி நடிகராக இருந்த போது அவருடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவருக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஜோடியாகிள்ளார் 
 
சந்தானம் நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது சந்தானம், காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்று ’டிக்கிலோனா’ என்ற படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த படத்தில் ஒரு கேரக்டர் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மதுமிதா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் ஒப்பந்தமான முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி அவர் வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. வழக்கறிஞர் உடையுடன் சந்தானத்துடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில்வைரல் ஆகி வருகிறது
 
சந்தானம் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கின்றனர் யுவன் சங்கர் ராஜா இசையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார்