1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (15:25 IST)

இரண்டு ஜோடிகளுடன் லூட்டியடிக்கும் சந்தானம்!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாகி அவதாரமெடுத்தவர் நடிகர் சந்தானம். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ஏ1 திரைப்படம் ரசிகர்களிடையயே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து "டிக்கோலோன" என்ற படத்தில் நடித்து வருகிறார். 


 
அப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய R.கண்ணன் இலாயக்கத்தில் சந்தானம் புதுப்படமொன்றில் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா  அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 
Masala pix , M K R P ப்ரோடுச்டின் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார். ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது. வருகிற பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.