வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (15:52 IST)

லியோ படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சஞ்சய் தத்.. வெளியான தகவல்!

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் தற்போது சென்னையின் சில பகுதிகளில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இடைவெளியே இன்றி நடத்தி வருகிறார் முருகதாஸ். படத்தில் வில்லனாக நடிக்க வித்யுத் ஜமால் ஒப்பந்தம் ஆனதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கேஜிஎஃப் 2 மற்றும் விஜய்யின் லியோ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.