செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (16:09 IST)

பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபல நடிகையான சமந்தா, பாலிவுட்டில் அறிமுகமாவதாகத் தகவல் கிடைத்துள்ளது.




 
சென்னையைச் சேர்ந்த சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் நாளை கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் 1500 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். அதன்பிறகு, ஹைதராபாத்தில் பிரமாண்டமான வரவேற்பு நடக்க இருக்கிறது. அதில், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டில் சமந்தா நடிக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுவும், தன்னுடைய மாமனாரான நாகர்ஜுனாவுடன் இணைந்து அவர் நடிக்கலாம் என்கிறார்கள். நாகர்ஜுனா – சமந்தா நடித்த ‘ராஜு கரி காதி 3’ தெலுங்குப் படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.