1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:10 IST)

திருமணத்திற்கு பின் அரசியலில் சமந்தா: நாகார்ஜூனா குடும்பம் தீவிரம்!!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு அரசியலில் களமிறங்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
இது ஒரு கிசுகிசுவாக இருக்கும் என எண்ணப்பட்ட நிலையில், இது உண்மை தான் என்பது போல சில தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கணவர் வீட்டில் சம்மதம் தெரிவித்ததோடு அரசியல் என்ட்ரிக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனராம்.
 
சமந்தா ஏற்கனவே நற்பணி அமைப்பு ஒன்றை நிறுவி உதவி செய்து வருகிறார். தெலங்கானாவில் வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் சமந்தா போட்டியிட உள்ளாராம். 
 
இதற்கு அடித்தளம் அமைக்கும் வேலைகளை நாகார்ஜூனா குடும்பம் இப்போதே செய்து வருகிறதாம். செகந்தராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
 
செகந்தராபாத் தொகுதி கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவருக்கு அத்தொகுதி சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர்களுடன் நீண்ட காலமாகவே சமந்தா நட்பு பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.