1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:41 IST)

ஹனிமூனை ஒத்திவைத்த சமந்தா

தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால், தன்னுடைய ஹனிமூனை ஒத்திவைத்துள்ளாராம் சமந்தா.


 
 
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இன்னும் இரண்டு நாட்களில் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் 1500 பேர் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். 
 
பொதுவாக, திருமணம் முடித்த புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வது வழக்கம். அதுவும், பிரபலங்களான இருவரும் தேனிலவு செல்லாமல் இருப்பார்களா?
 
ஆனால், இருவருமே இப்போதைக்குத் தேனிலவு வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளார்களாம். காரணம், இருவர் கையில் ஏகப்பட்ட படங்கள் பாக்கியிருக்கிறதாம். அதுவும் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடித்துவரும் ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. 
 
எனவே, அந்தப் படத்தை உடனே முடித்துக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் சமந்தா. எனவே, திருமணம் முடிந்ததும் இந்த மாத இறுதியில் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.