செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (12:44 IST)

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா

நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா இருவரும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைகின்றனர்.
 



ராம்கோபால் வர்மா முதன்முதலாக இயக்கிய ‘சிவா’ தெலுங்குப் படத்தில் நடித்தவர் நாகர்ஜுனா. இந்தப் படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக அமலாவும் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது மற்றும் சிறந்த முதல் படத்தின் இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார் ராம்கோபால் வர்மா. அதன்பிறகு ‘கோவிந்தா கோவிந்தா’ படத்தில் இருவரும் இணைந்தனர்.

ஆனால், அதன்பிறகு இருவரும் இணைய வாய்ப்பு அமையவில்லை. ‘கோவிந்தா கோவிந்தா’ ரிலீஸாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், மறுபடியும் இருவரும் இணைய இருக்கின்றனர். ‘ஆக்ஷன் படமான இது உருவாக இருக்கிறது. ‘இதற்கு முன்னால் நானோ, நாகர்ஜுனாவோ இதுபோன்ற கதையைப் பண்ணது கிடையாது. ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்” என்கிறார் ராம்கோபால் வர்மா.