செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (14:12 IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் சாய்பல்லவி & பிரகாஷராஜ் – வருகிறது ஆணவக் கொலை ஆந்தாலஜி !

வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு உடனடியாக நெட்பிளிக்ஸுக்காக ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்க இருக்கிறார்.

ஒரே மாதிரியான கதைக் கருவைக் கொண்ட  சில குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. வைல்டு டேல்ஸ் எனும் அர்ஜெண்டினிய படம் இந்த ஜானரில் வெளிவந்து உலக அளவில் அங்கிகாரம் பெற்றதை அடுத்து இப்பொது உலகெங்கும் பல மொழிகளில் அதுபோல படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையி தமிழில் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படத்துக்காக வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்காக இவர்கள் நான்குபேரும் தனித்தனியாக குறும்படங்களை இயக்க உள்ளனர். அந்த 4 குறும்படங்களின் கதைக்கருவும் ஆணவக் கொலை சம்மந்தப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றிமாறன் இயக்கும் பகுதியில் நடிப்பதற்காக பிரகாஷ்ராஜும் சாய் பல்லவியும் ஒப்பந்தமாகியுள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.