"தங்கமே உன்னை சந்தித்த பிறகு எல்லாமே இனிமை தான்" காதலில் உருகும் விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நயன்தாராவுடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில், “நன்றி தங்கமே! உங்களை சந்தித்த பின் வாழ்க்கை என்னை ஆசீர்வதித்து, இனிமையான தருணங்களை மட்டுமே கொடுத்திருக்கிறது! இந்த நாளுக்கு நன்றி! இந்த படத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.. இதனால் தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைகான வாய்ப்பு கிடைத்தது! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என நயனுடன் தான் இருக்கும் அழகிய புகைப்படத்தைப் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ்சிவன் !