தமிழ் சினிமாவை குறிவைக்கும் ஷாரூக்கான்!? சூப்பர் ஸ்டார் கனவு பலிக்குமா?

srk
Prasanth Karthick| Last Updated: ஞாயிறு, 3 நவம்பர் 2019 (15:04 IST)
தொடர்ந்து தமிழ் திரைப்பட இயக்குனர்களை இந்தி நடிகர் ஷாரூக்கான் சந்தித்து பேசி வருவது தமிழ் சினிமாவில் நுழைவதற்காக என பேச்சு எழுந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாரூக்கான். இவரது இந்தி படங்களுக்கு உலகளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ஷாரூக்கான் தனது திரை வாழ்க்கை தொடக்கத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘உயிரே’ திரைப்படம் இன்றளவும் தமிழ் மக்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கு பிறகு தமிழ் திரையுலகோடு எந்த தொடர்பும் இல்லாமலே ஷாரூக்கானின் படங்கள் அமைந்துவிட்டன. சமீபத்தில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் மீண்டும் ஆஜரானார் ஷாரூக்கான். அதிக தமிழ் நடிகர்கள் நடித்த இந்தி படமாக இருந்தது அந்த படம். படத்தின் முடிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு பாடல் கூட வைத்திருப்பார்.

srk

தனது நீண்ட கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் இயக்குனர்களோடு இணைந்து பணியாற்ற ஷாரூக்கான் விரும்புவதாய் கூறப்படுகிறது. சமீபத்தில் பிகில் பட ட்ரெய்லர் வெளியானபோது அட்லீயை பாராட்டிய ஷாரூக்கான், அட்லீயோடு ‘சங்கி’ என்ற தனது அடுத்த படத்திற்கான பணியையும் தொடங்கியுள்ளார். தற்போது வெற்றிமாறனோடு ஷாரூக்கான் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறனின் ‘அசுரன்’ பட இந்தி ரீமேக்கில் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது சினிமா மார்க்கெட்டை ரஜினிகாந்த் போல இந்தி முதல் தமிழ் வரை விரிவுப்படுத்தவே ஷாரூக்கான் தமிழ் இயக்குனர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :