1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (08:44 IST)

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் "ல் த கா சை ஆ"

ஈரோடு மாவட்டத்தை  சதா நாடார் எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்து  வெளி வரவிருக்கும்  திரைப்படம் "ல் த கா சை ஆ"
 
அவரது மனைவி மோனிகா செலேனா  நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு இதுவே முதல் முறையாகும்.
 
இது குறித்து இயக்குநர் சதா நாடார் பேசும் போது.......
 
எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு.
 
திரைப்படங்கள் மூலம்  நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். 
 
அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல
ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் 
'ல் தகா சைஆ'
 
நானும் என் மனைவியும் மோனிகா செலேனா இணைந்து இதில் பணியாற்றினோம்.
 
என் காதல் மனைவி  இருவருமே கதாநாயகன் நாயகியாக நடிக்கிறோம் கதாநாயகனாக நானும், கதாநாயகியாக என் மனைவி மோனிகா செலேனாவும்  நடித்திருக்கிறோம்.
 
நாங்களே கூட்டாக இயக்கிக் தயாரிக்கிறோம் 
இதில் எங்களைத் தவிர ஏராளமான கலைஞர்கள் நடித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் காதல் மனைவியுடன் இருக்கும் ஒருவனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறான் என்பதை ஒரு முழுப் படமாக சுவையான திரைக்கதையுடன்  உருவாக்கி இருக்கிறோம்.
 
இதற்கான படப்பிடிப்பை ஊட்டி ,ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், ஏற்காடு, பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, கோவா போன்ற இடங்களில் நடத்தி முடித்துள்ளோம்.
 
குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 
 
நான் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்ததில்லை. சினிமா பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டவை தான் ஏராளம். 
 
அதனால் நாங்கள் உருவாக்கிய கதையை எங்களால் சரியாகச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம் .அது சிறப்பாக வந்திருப்பதாகவே உணர்கிறோம்.
 
இப்படம் பார்ப்பவர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறோம் என்கிறார்.
 
படத்தின் நாயகியும் சதா நாடாரின் மனைவியுமான மோனிகா செலேனா படம் பற்றிக் கூறும்போது......
 
எனக்கு சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் உண்டு. ஏனென்றால் என் அப்பா இரண்டு படங்களில் நடித்தார். அதை எனது தாத்தா தயாரித்தார் . அப்பா மூலம் பார்த்து பார்த்து எனக்கு சினிமா மீது
ஆர்வம் வந்திருந்தது.
 
என் கணவரும் அதற்கான வாய்ப்பைத் தரும்போது மகிழ்ச்சியாக இந்தப் படத்தில் நான் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றுப் பணிகளை நான் பகிர்ந்து கொண்டேன். 
 
இந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
 
இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது என்றார்.