பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டது. அடுத்து, பார்வையாளர்கள் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர்களை வறுத்தெடுத்து விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில், 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர் என்பதும், அவர்களில் இரண்டாவது போட்டியாளராக சென்ற சாச்சனா என்பவர் இன்று வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் நாமினேஷனில் அதிக நபர்களால் நாமினேசன் செய்யப்பட்டவர் என்ற காரணத்தால், சாச்சனா வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்ததும், கண்ணீருடன் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பிக் பாஸ் பரிசை கீழே போட்டு உடைத்து வருத்தத்துடன் வெளியேறினார்.
அவரது வெளியேற்றம் மிகவும் நியாயமற்றது என்றும், ஒரே ஒரு நாள் மட்டுமே அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வைத்தது முற்றிலும் தவறானது என்றும் பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Edited by Siva