ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (22:42 IST)

வந்தாச்சு புது பிக்பாஸ்.. கமல்ஹாசனுக்கு பதில் இவர் தான்.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி என்பதை விஜய் டிவி நிர்வாகம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளதை அடுத்து பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பரிசீலனை செய்யப்பட்டார்கள். 
 
இறுதியில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் இதன் முன்னோட்ட வீடியோ படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
வந்தாச்சு புது பிக் பாஸ் என்ற கேப்ஷன் உடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சீசன் நிச்சயம் மற்ற சீசன்களை விட வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva