செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:09 IST)

ஏன் மாத்தி மாத்தி பேசுறீங்க… விஜய் தந்தையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழில் தமிழன் என்றுதான் குறிப்பிட்டேன் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மூத்த இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் சாயம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். சாயம் திரைப்படம் ஒரு மாணவனின் வாழ்க்கையில் சாதிய சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் பேசிய எஸ் ஏ சி ‘என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது சாதி என்ற இடத்தில் தமிழன் என்றுதான் நிரப்பினேன். முதலில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நான் போராட்டம் நடத்துவேன் என சொன்னபிறகு ஏற்றுக்கொண்டார்கள். இப்போது வரை தமிழன் என்றுதான் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

எஸ் ஏ சியின் இந்த பேச்சுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் எஸ் ஏ சியின் மற்றொரு பேச்சால் இப்போது ட்ரோல்கள் அதிகமாகியுள்ளன. இதே போல ஒரு சினிமா நிகழ்ச்சியில் சாதி மதம்  என்ற இடத்தில் விஜய்க்கு இந்தியன் எனக் குறிப்பிட்டதாக எஸ் ஏ சி பேசிய வீடியோவையும் தற்போது பேசிய வீடியோவையும் ஒன்றிணைத்து வைரலாக்கி வருகின்றனர்.