மேற்கு வங்கத்தில் உள்ள பாலத்தை தங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திய உ.பி. அரசு… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
உத்தர பிரதேச மாநில அரசு சார்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு நேற்று ஒரு விளம்பரம் அளிக்கப்பட்டது.
அந்த விளம்பரத்தில் ஒரு மிகப்பெரிய பாலத்தின் புகைப்படம் இடம்பெற்று அதில் யோகியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் முன்னேறுகிறது என விளம்பரப் படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்றிருந்த அந்த மேம்பாலம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட மா மேம்பாலம் ஆகும்.
இதையடுத்து இந்த விளம்பரத்தை வைத்து நெட்டிசன்கள் யோகி ஆதித்யநாத்தை இணையத்தில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் காங்ல்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.