செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:28 IST)

விஜய்யிடம் மன்னிப்புக் கேட்கும் எஸ் ஏ சந்திரசேகர்!

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் தனது மகனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரு மாதங்களுக்கு முன்னர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். எஸ் ஏ சியின் இதுபோன்ற செயல்களால் விஜய் அவரிடம் பேசுவதே இல்லை என்று கூட சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஒரு நேர்காணலில் எஸ் ஏ சந்திரசேகர் தன் மேல் விஜய்க்கு கோபம் இருந்தாலோ, அல்லது தான் செய்த சிறுதவறுக்காகவோ தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடன் இருக்கும் புஸ்ஸி பாபு என்பவர்தான் தனக்கும் விஜய்க்குமான இடைவெளியைப் பெரிது படுத்தி பலன் பெற்று வருகிறார் எனக் கூறியுள்ளார்.