திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (07:22 IST)

சப்தம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆதியுடன் சிம்ரன் மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.