சென்னை திரையரங்கில் ரூ.99 தான் கட்டணம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை திரையரங்கில் ரூ.99 தான் கட்டணம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கட்டணம் ரூபாய் 99 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள திரையரங்கில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் இந்த கட்டணம் வாரத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே என்பதும் ஒவ்வொரு புதன்கிழமையும் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கமலா திரையரங்கிற்கு அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.