வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (18:16 IST)

ரூ.500 அபராதத்தை எதிர்த்து வழக்கு: ரூ.10,000 அபராதம் விதித்த நீதிபதி!

court
முக கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 தமிழ்நாட்டில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி வழக்கு தொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
 முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சமூக கடமை என்றும் இதை எதிர்த்து வழக்கு தொடுப்பது சரியானது அல்ல என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
 
500 ரூபாய் அபராதம் என்ற அரசாணையை எதிர்த்து வழக்கு போட்டவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதத்தை நீதிபதி விதிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது