திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (23:20 IST)

150 விருந்தினர், ரூ.10 கோடி செலவு: சமந்தா திருமண தகவல்கள்

பல இளைஞர்களின் கனவுக்கன்னியான நடிகை சமந்தாவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் ஆகவுள்ளது. வரும் 6ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி இந்து,கிறிஸ்துவ முறைப்படி சமந்தா-நாகாசைதன்யா திருமணம் வெகுசிறப்பாக ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.



 
 
இந்த திருமணத்திற்கு தெலுங்கு, தமிழ் திரையுலகினர்கள் உள்பட மொத்தம் 150 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் கவனிப்புக்கு மட்டும் பல லட்சங்கள் செலவு செய்யப்படுகிறதாம்
 
மொத்தத்தில் சமந்தாவின் திருமண பட்ஜெட் ரூ.10 கோடி என்றும் இதில் பெரும்பான்மையான தொகை சமந்தாவின் பணம் என்றும் கூறப்படுகிறது.
 
திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிப்பை தொடரவுள்ளதாகவும் இதற்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.