கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே கிரிக்கெட்: சமந்தாவின் திட்டம்


sivalingam| Last Modified வியாழன், 28 செப்டம்பர் 2017 (07:01 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதிலாராஜ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 
 
ஒவ்வொரு மொழியிலும் மிதிலாராஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு சமந்தா தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் திருமணத்திற்கு பின்னர் ஒரு வாரம் கழித்து இந்த படத்திற்கான போட்டோஷூட் நடத்த சமந்தா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேர்கடரை இயல்பாக கையாள வேண்டும் என்பதால் சமந்தா கிரிக்கெட் விளையாடவும் பழகவுள்ளாராம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :