அடுத்தடுத்து வெளியாகும் 3 தென்னிந்திய பிரபலங்களின் படங்கள்: ரசிகர்களுக்கு செம விருந்து
அடுத்தடுத்து வெளியாகும் 3 தென்னிந்திய பிரபலங்களின் படங்கள்: ரசிகர்களுக்கு செம விருந்து
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி அடுத்தடுத்து மூன்று தென்னிந்திய பிரபலங்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து என கூறப்பட்டு வருகிறது
அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி தல அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படமும் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இணையாக உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து அடுத்த நாளே அதாவது ஜனவரி 14ஆம் தேதி பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.