அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ரிலிஸாக உள்ளது.