நவமபரில் தொடங்கும் ஆர்யாவின் அடுத்த படம்… மாஸ் படத்தோடு வருகிறார் நலன் குமாரசாமி!
இயக்குனர் நலன் குமாரசாமி 5 ஆண்டுகளுக்கு பின் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க உள்ளது.
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். ஆர்யா நடிக்கும் இந்த படம் ஒரு பேண்டஸி த்ரில்லராக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் பற்றி பேசியுள்ள நலன் இதுவரை வந்த எல்லா மாஸ் படங்களுக்கும் அளிக்கும் ஒரு சமர்ப்பணமாக இந்த படம் இருக்கும் எனக் கூறியுள்ளார்.