விஜய் மனைவி சங்கீதாவுடன் ரொமான்ஸ்…வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயகத்தில் சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் மாஸ்டர்.
இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.
இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களுன் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்னொரு பிரமாண்ட படம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்குத்தான் ரசிகர்க்ள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் தனது மனைவி சங்கீதாவுடன் பேட்டிகொடுப்பது போன்ற கிளாசிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில். நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை ரொமான்ஸாகப் பார்ப்பது போன்று உள்ளது.
இதுகுறித்து ஒரு விஜய் ரசிகர்கள் உன்பார்வையில் பைத்தியம் ஆனேன் என்று இப்படத்திற்கு கேப்சன் பதிவிட்டுள்ளார் , இது வைரலாகி வருகிறது.