பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், விஜய் சேதுபதி, வைரல் போட்டோ

vijay
Sinoj| Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (20:55 IST)


பொங்கலுக்கு உலகமெங்கும் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் ஒரு வாரம் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் கேரியரில் இப்படமும் முக்கியப் படமாக அமைந்துள்ளது.


இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் நடிகர் விஜய், விஜய்சேதுபதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இப்படத்தில் விஜய் வெள்ளை சர்ட், ஜீன்ஸ் பேண்ட், மூக்குக் கண்ணாடியுடன் ஸ்டைலிஸாக இருக்கிறார். தனது அடுத்தப் பட வேலைகளுக்கு மத்தியில் விஜய், விஜய் சேதுபதி இவ்விழாவில் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :