மாஸ்டர் பொங்கல்....தியேட்டரில் முதல் ஷோ !! முன்னணி நடிகையின் ...வைரல் புகைப்படம்

keerthisuresh
Sinoj| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (18:07 IST)

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


இன்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் பைரவா,சர்கார் உள்ளிட்ட ஹிட் படக்கள்ல் நடித்த தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர்
பக்கத்தில் மாஸ்டர் படம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.


அதில், ஒரு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் பரவசமாக உள்ளது. இது சிறந்த தருணம் என்று உணர்கிறேன். இது மாஸ்ட்ர் பொங்கல்…நானும் தியேட்டரில் படம் பார்க்கிறேன் என்று அவர் தியேட்டரில் உட்கார்த்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :