இனியும் திரைத்துறையில் முடக்கம் தொடர்ந்தால்.. அரசுக்கு ஆர்கே செல்வமணி கடிதம்
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று திரைத்துறை. படப்பிடிப்பு இல்லாததால் தினந்தோறும் கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது பெரும் சிக்கலில் உள்ளனர்.
இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் ஒருசில துறைகள் சமூக விலகலை கடைபிடித்து இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் திரைத்துறைக்கும் சில தளர்வுகள் வேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘இனியும் திரைத்துறையில் முடக்கம் தொடர்ந்தால், பசி, பட்டினியால் தொழிலாளர்கள் சாவை எதிர்நோக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்கு நிபந்தைனையுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது போன்று, திரைத்துறைக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி தர வேண்டும் என்றும்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஆர்கே செல்வமணியின் கோரிக்கையை தமிழக முதல்வர் விரைவில் பரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது