1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (14:33 IST)

டெல்லி மத்திய குழுவினரின் ஆய்வு முடிந்தது... தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா ?

தமிழகத்தில் நேற்று  மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119 எனவும்  அசோக்நகரில் உள்ள 11 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் ,தமிழகத்தில் கொரானா பாதித்த பகுதிகளை  ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது .   ஐந்து பேர் கொண்ட மத்தியக்குழு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

கடந்த   ஒரு வாரம் இக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இன்னும் இரு நாட்களில் மத்திய அரசிடம்  அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.