திடீரென அஜித் வீடியோவை வெளியிட்ட ஷாருக் கான் கம்பெனி!
நடிகர் அஜித் இந்தியில் நடித்த ஒரே படமான அசோகாவில் இருந்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது ரெட் சில்லிஸ் நிறுவனம்.
நடிகர் அஜித் நேரடியான தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். விதிவிலக்காக சில தெலுங்கு படங்களிலும் ஒரே ஒரு இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். இந்தியில் ஷாருக் கான் நடித்த அசோகா படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார்.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் அஜித் நடித்த சில காட்சிகளைப் பகிர்ந்து ‘தல அஜித்தின் முதல் மற்றும் கடைசி படமான அசோகாவில் இருந்து’ எனக் கூறியுள்ளது. திடீரென ஏன் அந்த வீடியோவை வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.