விஜய் சேதுபதி நடிக்கும் வெப் சீரிஸில் மேலும் ஒரு தமிழ் நடிகை!
இந்தியில் உருவாகும் வெப் சீரிஸில் ராஷி கண்ணாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தன் கைவசம் 7 முதல் 10 படங்களைக் கைவசம் வைத்திருப்பவர். அதனால் எந்நேரமும் அவர் படத்தின் ஷூட்டிங், படப்பிடிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் புதிது புதிதாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
இந்தியில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் மற்றும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த சீரிஸை ஃபேமிலி மேன் புகழ் இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்தியில் உருவானாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்த சீரிஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்போது இந்த சீரிஸில் நடிக்க தமிழ் படங்களில் நடித்து பிரபலமான ராஷி கண்ணாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.