1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:16 IST)

மாநாடு மோஷன் போஸ்டர் & டீசர் எப்போது ? சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!

மாநாடு படத்தின்  மோஷன் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து பெரும்பகுதி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படம்பிடிக்கப் பட வேண்டியுள்ளது.

இப்போது ஈஸ்வரன் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் படம் பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில் அந்த நாளில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி மாதம் வர உள்ள நிலையில் அப்போது டீசர் வெளியாகும் எனவும் அறிவித்தார். இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.