செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:28 IST)

விநியோகஸ்தர்கள் கொடுக்கும் அழுத்தம்… மாஸ்டர் தயாரிப்பாளர் எடுத்த துணிச்சலான முடிவு!

மாஸ்டர் படத்தின் விநியோகஸ்தர்கள் முன்பு வாங்கிய தொகையை விட கம்மியான தொகைக்கு படத்தைக் கேட்பதால் தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் லலித்.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரலிலேயே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளும் மாஸ்டர் ரிலீஸ எதிர்நோக்கி காத்துள்ளன. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் முன்பே படத்தின் மீது இருந்த அதிகப்படியான எதிர்பார்ப்பால் அதிக விலைக் கொடுத்து இந்த படத்தை வாங்கினர் விநியோகஸ்தர்கள். ஆனால் கொரோனாவுக்கு பின்னான நிலைமை சரியில்லை என்பதால் முன்பு பேசிய பணத்தில் இருந்து 30 சதவீதம் வரைக் கம்மியாக கேட்டுள்ளனராம். ஆனால் அதற்கு சம்மதிக்காத லலித்குமார் தானே படத்தை சில் ஏரியாக்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.