செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:22 IST)

சூர்யாவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்தான் – பரபரப்பு தகவல்!

சூர்யா ஞானவேல் இயக்கத்தில் தயாரித்து நடிக்கும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான  திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் மாதம்  வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனால் சூர்யாவின் இந்த முடிவு திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது 10 மாத கால தாமதத்துக்குப் பின்னர் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகவுள்ள மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ள பல திரையரங்க உரிமையாளர்களும் விஜய்க்கு நன்றி சொல்லி வருகின்றனர். ஆனால் சூர்யா ஓடிடியில் ரிலீஸ் செய்ததால் அவரது குடும்பத்தினர்களான கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோரின் படங்களுக்கு இனிமே தியேட்டர்கள் வழங்க மாட்டோம் என்றும்  அவர்கள் ஓடிடியிலேயே ரிலிஸ் செய்து கொள்ளட்டும் என்று சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்க உரிமையாளர் மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் இந்த வெட்டிக் கோப பேச்சைக் கண்டுகொள்ளாத சூர்யா இப்போது தான் நடித்து தயாரித்துள்ள அடுத்த படத்தையும் அமேசான் தளத்திலேயே ரிலீஸ் செய்ய உள்ளாராம். ஞானவேல் இயக்கத்தில் குழந்தைக் கல்வி சம்மந்தப்பட்ட படத்தை அவர் தயாரித்து வருகிறார். அந்த படத்தில் ஒரு நீண்ட கௌரவ தோற்றத்திலும் அவர் நடிக்கிறார். அதனால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் சூர்யாவின் இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களை மேலும் கோபமாக்கியுள்ளது.